கோலிவுட்டின், முன்னணி நடிகையாக வேகமாக வளர்ந்தவர் தமன்னா. "அயன் , சுறா, பையா என்று அவர் நடித்த படங்களில், அவரது கிளாமர் நடிப்பு, இளம்ரசிகர்களை மின்னலாக தாக்கியதால்,"அடுத்து, தமிழில் குறைந்தது ஒரு பத்து ஆண்டுகளாவது, தமன்னாவின் கொடி பறக்கும் என்பது, பலரது கருத்தாக இருந்தது.
ஆனால், என்ன காரணமோ, "வேங்கை படத்திற்கு பின், தமிழில் புதிய படமின்றி, தெலுங்கு மற்றும் இந்தி என்று இடம் பெயர்ந்தார் தமன்னா. இந்த நிலையில், அஜீத் படத்தின் மூலம், மீண்டும் கோலிவுட்டுக்கு வருகிறார் தமன்னா. அதோடு, முதல் ரவுண்டை விட, படு கிளாமராக நடிக்க இருப்பதாகவும், பரபரப்பு தீயை கொளுத்திப் போட்டுள்ளார், தமன்னா.
"இந்தியில் போதிய வாய்ப்பு இல்லாததால் தான், மீண்டும் கோலிவுட்டுக்கு வருகிறீர்களா என, கேட்டால், முறைக்கிறார், தமன்னா. "இந்தியில் தொடர்ந்து பிசியாக நடித்தாலும், தமிழ், தெலுங்கிலும், சாதிக்க வேண்டும் என்ற, ஆசை உள்ளது.
தேசிய அளவில், அனைத்து முக்கிய மொழிகளிலும், நடிக்க வேண்டும் என்பதே, என் விருப்பம் என்கிறார், தமன்னா.
Post a Comment