ஸ்ருதிஹாசனை கவர்ந்த கிரிக்கெட் வீரர் ரெய்னா



பரபரப்புக்கு பஞ்சமில்லாத நடிகை என்ற பட்டியலில் இடம் பிடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

ஏற்கனவே சித்தார்த்துடன் பழகி வருவதாக ஆந்திராவில் பற்றி எரிந்தது. அதையடுத்து, இப்போது மெக்ஸிம் இதழுக்கு படுகவர்ச்சியான போஸ் கொடுத்தது, டி டே படத்தில் விலைமாதுவாக நடிப்பது என்று தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்தநிலையில் தற்போது, கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன் ஸ்ருதி நெருங்கி பழகி வருவதாக செய்திக்ள பரவியுள்ளன.

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார் ரெய்னா. சமீபத்தில் ஐதராபாத் அணிக்கு எதிரான நடந்த போட்டியில் 52 பாலில் 99 ரன்களை குவித்து கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்த ரெய்னா, ஸ்ருதியையும் கவர்ந்துவிட்டாராம்.

அதையடுத்து, ரெய்னாவை நேரில் பார்த்து உற்சாகப்படுத்தினார் ஸ்ருதி. அப்படி தொடங்கிய அவர்கள் நட்பு இப்போது இன்னும் வளர்ந்துவிட்டதாம். இருவரும் அடிக்கடி சந்தித்து மனம் விட்டு பேசி வருகிறார்களாம்.
Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos