ஸ்ருதி ஹாஸனின் அடுத்த அதிரடி... இப்போ விலைமாது கேரக்டர்



மேக்ஸிம் இதழின் அட்டைப் பட செக்ஸி போஸ் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், ஸ்ருதிஹாசன் அடுத்த அதிரடியில் இறங்கியுள்ளார்.

கமல் ஹாஸன் மூத்த மகள் ஸ்ருதி ஹாஸன் இப்போது இந்தி, தெலுங்கில் பரபரப்பான நடிகையாகிவிட்டார். அந்தப் பரபரப்பு குறையாமல் பார்த்துக் கொள்ளும் வேலையையும் சரியாக செய்து வருகிறார்.

காதல் கிசுகிசு, பரபரப்பு பேட்டிகள் என ஆரம்பத்தில் செய்து வந்தவர், இப்போது செயலில் இறங்கிவிட்டார். சில தினங்களுக்கு முன் தம்மாத்துண்டு உடையில் மேக்ஸிம் இதழுக்கு போஸ்கள் கொடுத்தார்.

இப்போது ஒரு இந்திப் படத்தில் விலைமாது வேடத்தில் நடிக்கிறாராம். டி டே என்ற பெயரில் தயாராகும் இந்தப் படத்தை நிகில் அத்வானி இயக்குகிறார். ரிஷி கபூர், அர்ஜூன் ராம்பால் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.

பொதுவாக திரையுலகிலிருந்து ரிடையராகும் சமயத்தில்தான் நடிகைகள் இந்த மாதிரி வேடங்களில் நடிப்பார்கள். ஆனால் ஸ்ருதி ஹாஸன் ரொம்பவே ஸ்பீடாக இருக்கிறார்... தனது ஏழாவது படத்திலேயே விலைமாதுவை விரும்பி ஏற்றுள்ளார்
Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos