ரஜினி, கமல், சரத்குமார், விஜய் படங்களை இலங்கையில் திரையிட எதிர்ப்பு



சமீபகாலமாக இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்த்திரையுலகம் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதோடு பல்வேறு தீர்மானங்களையும் நிறைவேற்றி வருகிறது.

இதனால் இலங்கையில் உள்ள சில அமைப்புகள் முக்கிய தமிழ் நடிகர்களின் படங்களை இலங்கை திரையிட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ராவணா சக்தி என்ற அமைப்பு இலங்கை திரைப்பட கூட்டுதாபனத்திற்கு முன்பாக கடந்த புதன்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.

அப்போது, சிங்களர்களுக்கு எதிர்ப்பாக செயல்பட்டு வரும் தமிழ் நடிகர்களின் திரைப்படங்கள் இலங்கையின் உள்நாட்டில் திரையிட வேண்டிய தேவையில்லை. முக்கியமாக ரஜினி, கமல், சரத்குமார், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் இலங்கைக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்தனர்.

அதனால் அவர்களின் படங்களை இலங்கையில் திரையிட தடை விதிக்க வேண்டும் என்று அந்த அமைப்பும் கோரிக்கை வைத்துள்ளதாம்.

ஆனால், தென்னிந்திய திரைப்படங்களை இலங்கையில் திரையிடக்கூடாது என்று அந்த அமைப்பு கோருவது அரசியல் ரீதியான பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கே என்று அங்குள்ள தமிழ் அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.
Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos