சென்னை: ஒரே தலைப்பு கொண்ட 2 படங்களில் நடிக்கிறார் ஸ்ருதி. மறைந்த ராஜ்கபூர் நடித்து, இயக்கிய Ôஸ்ரீ 420Õ படத்தில் இடம்பெற்ற பிரபல பாடல், Ôரமய்யா வஸ்தாவய்யாÕ.
இந்த பாடல் வரியை தனது இந்தி படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறார் பிரபுதேவா. தமிழில் வெளியான உனக்கும் எனக்கும் படம், தெலுங்கு படத்தின் ரீமேக். அந்த ஒரிஜினலை (தெலுங்கு படத்தை) இயக்கியவர் பிரபுதேவா.
இப்போது அதே படத்தை இந்தியில் அவர் இயக்கி வருகிறார். இப்படத்துக்குதான் ரமய்யா வஸ்தாவய்யா என தலைப்பிட¢டுள்ளார். இதில் புதுமுக ஹீரோவுக்கு ஜோடியாக ஸ்ருதி நடிக்கிறார். இப்பட ஷூட்டிங் முடியும் நிலையில் உள்ளது.
இதற்கிடையே ரமய்யா வஸ்தாவய்யா என்ற பெயரிலேயே தெலுங்கிலும் ஒரு படம் உருவாகிறது. இதில் ஜூனியர் என்டிஆர் ஹீரோ. சமந்தா ஹீரோயின். இன்னொரு ஹீரோயின் வேடத்துக்கு பலரிடம் பேசினர். கடைசியாக ஒப்பந்தமானவர் ஸ்ருதி.
இது குறித்து ஸ்ருதி கூறுகையில், ÔÔநான் நடிக்கும் இரண்டு படங்களுக்கும் ஒரே பெயர் அமைந்தது, ஏதேச்சையாக நடந்தது. பெயர் ஒன்றாக இருந்தாலும் இரண்டு படங்களுக்கும் 1 சதவீதம் கூட ஒற்றுமை இருக்காது.
இரண்டுமே இரண்டு வகையான படங்கள். அதே போல் எனது கேரக்டரும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமே இருக்காது. அந்த அளவுக்கு வித்தியாசமாக இருக்கும்" என்றார்.





Post a Comment