பெரும்பாலும் மன அழுத்தத்தை அதிகரிப்பதில் பழக்கவழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அதிலும் நம்மை ரிலாக்ஸ் செய்ய வைக்கும் என்று நினைத்து செய்யும் பழக்கவழக்கங்கள் தான் அதிக அளவில் மன அழுத்தத்தை தூண்டிவிடுகின்றன. உதாரணமாக, தொலைக்காட்சி பார்த்தால், மன அழுத்தம் குறையும் என்று மனதை ரிலாக்ஸ் செய்ய டிவியைப் பார்ப்போம்.
ஆனால் உண்மையில் அவை தான், மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன. அதிலும் இன்றைய அவசர உலகில் அனைத்தும் அவசரமாக நடப்பதால், வாழ்க்கையே ஒருவித அவசரத்தில் ஓடுகிறது.
இதனால் மன அழுத்தம் மட்டுமின்றி, வேறு பல உடல்நல பிரச்சனைகளும் உண்டாகின்றன. எனவே மனதை அழுத்தமின்றி வைப்பதற்கு, ரிலாக்ஸ் செய்ய மேற்கொள்ளும் தவறான செயல்களை மேற்கொள்ளாமல் இருப்பதே, மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான சிறந்த வழியாகும்.
இப்போது மன அழுத்தம் குறையும் என்று நினைத்து செய்யும் தவறான பழக்கவழக்கங்கள் என்னவென்று பார்த்து, அவற்றை தவிர்த்து, மன அழுத்தத்தைக் குறைப்போம்.
தாமதமாக எழுவது மன அழுத்தத்தை உருவாக்குவதில் முதன்மையானது காலையில் தாமதமாக எழுவது தான். எப்படியெனில், காலையில் தாமதமாக எழுவதால், வேலைக்கு நேரமாகிவிட்டது என்று அவசர அவசரமாக காலை உணவை சாப்பிடாமல் கூட கிளம்பிவிடுகிறோம்.
இதனால் அன்றைய நாள் ஒருவித மன அழுத்தத்துடனேயே இருக்கும். அதையே தினமும் தொடர்ந்து பின்பற்றினால், மன அழுத்தம் அதிகரித்து, வேறு சில உடல் பிரச்சனைகளும் ஏற்படும்.
டிவி பார்ப்பது பெரும்பாலான மக்கள் மனதை அமைதிப்படுத்துவதற்கு, டிவியைப் பார்ப்பார்கள். ஆனால் அவ்வாறு டிவி பார்ப்பது, உண்மையில் மன அழுத்தத்தைத் தான் அதிகரிக்கும். எனவே மனதை ரிலாக்ஸ் செய்வதற்கு டிவியைப் பார்க்காமல், அதற்கு பதிலாக நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.
புகைப்பிடித்தல் புகைப்பிடிப்பவர்கள், ஏதேனும் டென்சன் என்றால் உடனே அதனைக் கட்டுப்படுத்துவதற்கு, சிகரெட் பிடிப்பார்கள். ஆனால் புகைப்பிடித்தால், மன அழுத்தம் குறையாது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் பொதுவாக டென்சனாக இருக்கும் போது இதயத் துடிப்பின் அளவானது அதிகமாக இருக்கும். இந்த நேரம் புகைப்பிடித்தால், இது தற்காலிகமாக சிலருக்கு அமைதியைக் கொடுத்தாலும், உண்மையில் அது மனதை அழுத்தம் அடையச் செய்து, வேறு சில தீவிர பிரச்சனைகளை உண்டாக்கும்.
வேலையில் அதிக ஆர்வம் செய்யும் வேலையை விரும்பி செய்தால், நிச்சயம் அது நல்லது தான். இருப்பினும் வேலை பிடிக்கும் என்பதற்காக, எப்போதுமே அலுவலகத்தில் இருந்தால், அது மனதை எப்போதும் ஒருவித அழுத்தத்திலேயே வைத்திருக்கும்.
அது வெளிப்படையாக தெரியாது. ஆனால் சில சமயங்களில் அந்த அழுத்தமானது மனதிற்குள்ளேயே அதிகரித்து, மாரடைப்பை ஏற்படுத்திவிடும். எனவே வேலையை விட, உடல் நலம் முக்கியமானது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
முறையற்ற உணவுப்பழக்கம் இன்றைய உலகில் அனைவருமே பிஸியாக இருப்போம். அதனால் போதிய இடைவெளியில் உணவுகளை சாப்பிடாமல் இருப்போம். மேலும் அப்போது ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவோம்.
இவ்வாறு சரியான நேரத்தில், சரியான உணவை சாப்பிடாமல் இருந்தால், அது உடல் எடையை அதிகரிப்பதோடு, மன அழுத்தத்தையும் அதிகரிக்கும்.
நிதானமின்றி கோபத்தை வெளிப்படுத்துதல் அலுவலகத்தில் அதிகப்படியான வேலைப்பளு என்பதால், அங்குள்ளோரின் மீதுள்ள கோபத்தை வீட்டில் உள்ள மனைவியிடம் வெளிப்படுத்துவதால், கோபம் குறையுமா என்ன? உண்மையில் இல்லை அல்லவா!
எனவே ஏதேனும் கோபம் என்றால், முதலில் அதனை கட்டுப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். மற்றவரிடம் வெளிப்படுத்துவதற்கு பதிலாக, தியானம், உடற்பயிற்சி போன்றவற்றை செய்து குறைக்க வேண்டும்.
குருட்டுத்தனமாக சாப்பிடுதல் நிறைய மக்கள் மன அழுத்தம் அல்லது டென்சன் என்றால் அதனை கட்டுப்படுத்துவதற்கு, டெசர்ட் அல்லது வறுத்த ஸ்நாக்ஸ்களை சாப்பிடுவார்கள்.
ஆனால் அந்த ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதால், உண்மையில் மன அழுத்தமானது குறையாது. அது உடல் எடையை அதிகரிப்பதோடு, இன்னும் மன அழுத்தத்தை அப்படியே தான் வைத்திருக்கும்.
போதிய உடற்பயிற்சி இல்லாமை மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு சிறந்த வழியென்றால் அது உடற்பயிற்சி தான். அத்தகைய உடற்பயிற்சி இல்லாவிட்டால், மன அழுத்தம் குறையாமல், இன்னும் தான் அதிகரிக்கும்.
எனவே தினமும் காலையில் சிறிது நேரம் லேசான உடற்பயிற்சி, ஜாக்கிங், வாக்கிங் அல்லது ரன்னிங் போன்றவற்றை மேற்கொண்டால், உடல் எடை குறைவது மட்டுமின்றி, மன அழுத்தமும் குறையும்.
அழகைப் பராமரிக்காமல் இருப்பது அதிகமான வேலைப்பளுவினால், சிலருக்கு அழகைப் பராமரிக்க நேரமின்றி போகிறது.
இதனால் வெளியே செல்லும் போது, மற்றவரை பார்க்கும் போது நாம் அழகாக இல்லை என்ற எண்ணத்திலேயே மனதில் ஒருவித அழுத்தம் ஏற்படுகிறது. எனவே அவ்வப்போது நேரம் ஒதுக்கி அழகை பராமரித்து வந்தால், எதற்கு கவலைப்பட வேண்டாம்.
போதிய தூக்கமில்லாமை ஒருவருக்கு 7 மணிநேர தூக்கமானது மிகவும் இன்றியமையாதது. ஆனால் நிறைய மக்கள் குறைந்த நேரம் மட்டும் தூங்குவதால், அது மனதில் எரிச்சலை உண்டாக்கி, தலைவலி மற்றும் சோர்வை ஏற்படுத்தி, இறுதியில் மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும்.
எனவே நல்ல தூக்கத்தை மேற்கொள்வதும், மன அழுத்தத்தைக் குறைக்கும் சிறந்த வழியாகும்.





Post a Comment