நம்பர் 1 நிரந்தரமில்லை... தமன்னா



சென்னை: ஆண்களுக்கு இணையான அளவு பெண் ரசிகைகளையும் கொண்ட நடிகையான தமன்னா, முதலிடம் என்பது நிலையானதல்ல, ஆனாலும் ரசிகர்களின் அன்பில் மகிழ்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

2012-ல் மக்களை அதிகம் கவர்ந்த பெண்கள் பற்றிய கருத்துக்கணிப்பில் தமன்னாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இதனால் தமன்னா ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறாராம். தமன்னா தன் சந்தோஷத்தை இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார்....

ரொம்ப சந்தோஷம்... என் தோற்றம் என்பது இல்லாமல் சினிமாவில் எப்படி நடிக்கிறேன் என்பதை வைத்து முதலிடத்துக்கு என்னை தேர்வு செய்துள்ளனர்.

நல்ல கதாபாத்திரங்கள்... குடும்ப பாங்காகவும், ஜாலியான கேரக்டர்களிலும் நடித்து வருகிறேன். கல்லூரி, அயன், பையா போன்ற படங்களில் அத்தகைய கேரக்டரில் நடித்து உள்ளேன். ஆண்கள் மட்டுமின்றி பெண் ரசிகைகளும் எனக்கு நிறைய இருக்கிறார்கள்.

நான் ஹிருத்திக் ரசிகை... நடிகர்களில் எனக்கு ஹிருத்திக் ரோஷனை பிடிக்கும். நான் அவருடைய ரசிகை. சூர்யா, விஜய், ஜெயம் ரவி போன்றோர் பிரமாதமாக நடிக்கின்றனர். அவர்களையும் எனக்கு பிடிக்கும்.

கட் அவுட் பூஜை... ரசிகர்கள் எனது கட்அவுட்களுக்கு பூஜை, பால்அபிஷேகம் செய்கின்றனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனாலும் இந்த மரியாதைகள் நிரந்தரம் அல்ல என்று எனக்கு தெரியும். இது வரும் போகும்.

நிரந்தரமானது இல்லை.. தமிழில் அஜீத்துடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். இந்த வருடம் அப்படம் ரிலீசாகும். பட உலகம் போட்டி நிறைந்ததாக உள்ளது. இன்று நான் இருக்கிறேன். நாளை வேறொருத்தர் வருவார். நம்பர் ஒன் இடம் என்பது நிரந்தரமானது அல்ல' என தமன்னா கூறினார்.
Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos