கொல்கத்தா:
நடிகரும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் கொல்கத்தா ஹோட்டலில் தன்னை சந்திக்க வந்த மாற்றுத் திறனாளி ரசிகருடன் பேசி மகிழ்ந்ததுடன் அவரை ஐபிஎல் போட்டியை காணவும் அழைப்பு விடுத்தார்.
ஐபிஎல் 6வது சீசன் துவங்கிவிட்டது. இந்த சீசனின் முதல் போட்டி நேற்று நடந்தது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி டெல்லி டேர்டெவில்ஸ் அணியை தோற்கடித்தது. முன்னதாக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான இந்தி நடிகர் ஷாருக்கான் கொல்கத்தாவில் தங்கியிருந்த ஹோட்டலுக்கு ஒரு தாயும், வீல் சேரில் ஒரு வாலிபரும் வந்தனர்.
21 வயதாகும் ஹர்ஷு என்ற போஸ், தனது தாயுடன் ஷாருக்கானை பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் ஹோட்டலுக்கு வந்தார். ஆனால் ஹோட்டல் ஊழியர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இது குறித்து ஷாருக்கின் மேனேஜரிடம் தெரிவித்தனர். ஷாருக்கோ அவர்களை உடனே உள்ளே விடுங்கள் என்று தெரிவித்துவிட்டார். இதையடுத்து போஸின் கனவு நிறைவேறியது.
அவர் தனக்கு பிடித்த ஷாருக்கானை சந்தித்து பேசினார், போட்டோ எடுத்துக் கொண்டார். ஷாருக் தனது அணி விளையாடும் ஆட்டத்தை பார்க்க வருமாறு போஸை கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து போஸ் கொல்கத்தா அணியை சந்தித்துடன் நேற்றைய ஆட்டத்தின்போதும் அணிக்கு ஆதரவாக அரங்கிற்கு வந்துள்ளார். போஸுக்கு பிடித்த அணி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment