டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டருக்கு 45 காசுகள் உயர்த்தப்பட்டுள்ள டீசலின் விலை 2013 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
டீசல் விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. வருகிறது. சென்னையில், இந்த விலை உயர்வு, 55 காசுகளாக இருக்கும்.
பெட்ரோல் மீதான விலை கட்டுப்பாட்டை, மத்திய அரசு கைவிட்டது முதல், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், டீசல் விலையை அவ்வப்போது உயர்த்தி வருகின்றன.
அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி, 18 ஆம் தேதி, டீசல் விலை, 45 காசுகள் உயர்த்தப்பட்டது. அதன்பின், பிப்ரவரி, 16 ஆம் தேதியும், அதே அளவு உயர்த்தப்பட்டது.
இந்த விலை உயர்வுக்குப் பின், வாட் மற்றும் உள்ளூர் விற்பனை வரிகள் சேர்த்து, சென்னையில், ஒரு லிட்டர் டீசல் விலை, 51.78 (முந்தைய விலை 51.23) ரூபாய்க்கு விற்கப்படும். அதாவது, முந்தைய விலையுடன், உயர்த்தப்பட்ட விலைகள் மற்றும் வரி சேர்த்து, இந்த விலைக்கு இன்று முதல் விற்கப்படுகின்றது.
இந்த விலை உயர்வுக்குப் பின்னும், டீசல் விற்பனையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், லிட்டருக்கு, 8.19 ரூபாய் இழப்பை சந்தித்து வருகின்றன. மண்ணெண்ணெய் விற்பனையில், 33.43 ரூபாயும், சமையல் காஸ் சிலிண்டர் விற்பனையில், சிலிண்டர் ஒன்றுக்கு, 439 ரூபாய் இழப்பை சந்திக்கின்றன.





Post a Comment