என்னென்ன தேவை?
இடியாப்ப மாவு -2 கப்
தேங்காய்- 1 முடிதுருவியது
நெய்-2 டீஸ்பூன்
சர்க்கரை - 200 கிராம்.
எப்படி செய்வது ?
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். மாவை அகலமான பாத்திரத்தில் போட்டு கொதித்துக் கொண்டிருக்கும் நீரை டம்ளரில் எடுத்து மாவில் ஊற்றி (சிறிது சிறிதாக) கரண்டிக் காம்பினால் கிளறிவிடவும்.
இதிலேயே மாவு பாதி வெந்துவிடும். பின் சற்று சூடு ஆறி கை பொறுக்கும் சூடு வந்தவுடன் கையால் நன்கு அழுத்தி கொழுக்கட்டை மாவுபோல் பிசைந்து கொள்ளவும்.
இட்லிச் சட்டியை அடுப்பில் நீருற்றி வைக்கவும். குழித்தட்டில் ஈரத்துணியைப் போட்டு, மாவை கைகொள்கிற அளவு எடுத்து நீளவாக்கில் உருட்டி இடியாப்பக் கட்டையில் வைத்து சுற்றிப் பிழியவும்.
மூடி வைக்க முடிகிற அளவு பிழியவும். 1 இடியாப்ப உரல் பிழிந்தால் ஒரு முறைக்குப் போதும் என்று விட்டுவிட வேண்டாம். இரண்டு, மூன்று சுற்றுப் பிழியலாம்.
வெந்தவுடன் இட்லி எடுப்பதுபோல் எடுத்து சூட்டோடு உதிர்த்து தேங்காய்ப்பூ, சீனி, நெய் சேர்த்து உதிர்த்துக் கலக்கவும். திடீர் விருந்தாளிக்கு உபசரிக்க சமயத்தில் கை கொடுக்கும் இந்த இனிப்பு.





Post a Comment