தேவையானவை
முருங்கைகீரை - 2 கப்
வெண்ணெய் - 1 ஸ்பூன்
சோள மாவு - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
உப்புத்தூள், மிளகுத்தூள் - தேவைகேற்ப
செய்முறை
கீரையை 2 கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவைத்துகொள்ளவும்.
இவ்வாறு செய்யும் போது கீரையில் உள்ள சத்து தண்ணீரில் இறங்கி விடும்.
கீரை தண்ணீரை உடனடியாக வடிகட்டி கொள்ளவும்.
இந்த தண்ணீர் சூடாக இருக்கும் போதே அதனோடு வெண்ணை மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
ஒரு பாத்திரத்தில் இந்த கீரை தண்ணீரோடு, நீரில் கலந்து வைத்த சோள மாவு மற்றும் தேவையான அளவு மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்





Post a Comment