லோக்சபா தேர்தலுக்குப் பின் கிளார்க் வேலைக்குப் போவார் மன்மோகன் சிங் - தா.பா



தஞ்சாவூர்: 

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, பிரதமர் மன்மோகன்சிங், வங்கியில் கிளார்க் வேலை காத்திருக்கிறது. நல்ல மனிதராக பிரதமர் பொறுப்பில் தொடங்கி மகாமட்டமான மனிதராக பதவி காலத்தை முடித்த பெருமை மன்மோகன் சிங்குக்கு சேரும் என்றார் தமிழ் மாநில இந்திய கம்யூனிஸ்ட் செயலாளற் தா.பாண்டியன்.

 தஞ்சாவூர் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவில் நிலங்களை முறைப்படுத்தி சம்பந்தப்பட்ட குத்தகைதாரர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். 

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஏப்ரல் 2- ந் தேதி சென்னையில் பேரணி நடைபெற உள்ளது. மேலும் முதல்வரிடம் நேரில் சென்று கோரிக்கை மனு அளிக்கப்படும். 

இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து ஒரு மாநிலத்தின் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டியதில்லை என்று வெளியுறவு துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

 அது மிகவும் தவறு. இலங்கையில் நடப்பது உள்நாட்டு விவகாரம் என்றால், அங்கு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி மத்திய அரசு ஒதுக்கியது ஏன்?. 

இலங்கையில் நிவாரண பணிகளை முடுக்கி விட மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். மத்திய அரசு தொடர்ந்து நடைபெற அருகதை இல்லை.

 ஜனநாயகத்தை மதித்து ஜனாபதியிடம் ஒப்படைத்து விட்டு காபந்து அரசை பிரதமர் வழிநடத்தலாம். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு, பிரதமர் மன்மோகன்சிங், வங்கியில் கிளார்க் வேலை காத்திருக்கிறது.

 நல்ல மனிதராக பிரதமர் பொறுப்பில் தொடங்கி மகாமட்டமான மனிதராக பதவி காலத்தை முடித்த பெருமை மன்மோகன் சிங்குக்கு சேரும் என்றார் அவர்.
Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos