மகர மஞ்சுவில் தாசியாக நடிக்கும் கார்த்திகா!



முன்பெல்லாம் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து ஓய்ந்த பிறகு வங்காளத்திலோ மலையாளத்திலோ போய் தாசி அல்லது செக்ஸ் தொழிலாளி வேடமேற்று தங்கள் திறமையைக் காட்டுவார்கள் ஹீரோயின்கள். 

இது பாஸ்ட் புட் காலமல்லவா... அதனால் ரொம்பவே வேகமாக தாசி வேடத்துக்கு புரமோட் ஆகிவிடுகிறார்கள் போலிருக்கிறது. அந்த வகையில், சமீபத்தில் கோ படத்தில் அறிமுகமான நடிகை ராதாவின் மகள் கார்த்திகா இப்போது தாசி வேடம் ஏற்றுள்ளார், தாய் மொழியான மலையாளத்தில். 

படத்துக்குப் பெயர் 'மகர மஞ்சு'. இந்தப் படத்தில் கார்த்திகாவுக்கு ஜோடியாக பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் நடித்திருக்கிறார். புகழ்பெற்ற ஓவியர் ரவிவர்மனின் வாழ்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம் இது. 

கார்த்திகா ஏற்றுள்ள தாசி வேடத்தை எப்படி செய்ய வேண்டும் என்றும் அம்மா ராதா ஏகப்பட்ட டிப்ஸ் கொடுத்து வருகிறாராம். ஏற்கெனவே தாசி வேடத்தில் ஒரிஜினலாக அசத்திக் காட்டிய நடிகைகளின் க்ளிப்பிங்குகளையெல்லாம் போட்டுப் பார்த்து, ஒரு தேர்ந்த தாசிப் பெண்ணாகவே மாறியிருக்கிறாராம் இந்தப் படத்தில்.

 தமிழில் அப்சரஸ் என்ற தலைப்பில் வெளியாகிறது மகரமஞ்சு. என்னமோ போங்க... ஸ்வேதா மேனனுக்குப் போட்டியா ஆகாம இருந்தா சரி!

Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos