செட்டிநாடு செய்முறையில் செய்யப்படும் இந்த அடை மிகவும் பிரபலமானது. ஒரு மணி நேரத்திற்குள் இந்த அடை மாவைத் தயாரித்து விடலாம். சுவையான அடை செய்வதற்கான எளிய செய்முறைக் குறிப்பு இங்கே வழங்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு – 3 /4 கப்
துவரம்பருப்பு – 3 /4 கப்
பாசிப்பருப்பு – 1 /4 கப்
உளுத்தம்பருப்பு – 1 /4 கப்
இட்லி அரிசி – 3 /4 கப்
பச்சரிசி – 3 /4 கப்
காய்ந்த மிளகாய் -6
சோம்பு – 1/2 தேக்கரண்டி
அடை மாவுடன் கலக்க தேவையான பொருட்கள்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப்
பொடியாக நறுக்கிய கருவேப்பிலை – 1 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய மல்லித்தழை – 2 மேசைக்கரண்டி
தேங்காய் துருவியது – 3 மேசைக்கரண்டி
பெருங்காயம் – சிறிது
உப்பு – சிறிது
செய்முறை
மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும்(கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, இட்லி அரிசி, பச்சரிசி, காய்ந்த மிளகாய் , சோம்பு) 45 நிமிடங்கள் ஊற வைத்து பின் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின் மாவுடன் கலக்க கொடுத்துள்ள பொருட்களைக் கலந்து தோசை போல் ஊற்றவும். அடை மாவு திக்காக இருக்க வேண்டும். தோசை மாவு போல் லூசாக இருக்கக் கூடாது.





Post a Comment