விஜய் தன்னுடைய அடுத்த படத்திற்கு ‘தலைவா’ என்று பெயர் வைத்தாலும் வைத்தார் அதைப்பற்றி வெளியாகும் சுவாரஸ்ய தகவல்களுக்கு பஞ்சமே இல்லாமல் போய்விட்டது.
தினம் ஒரு தகவல்கள் அந்த படத்தைப் பற்றி வந்து கொண்டேதான் இருக்கிறது.
விஜய் எம்.பி தேர்தலில் போட்டியிடப்போகிறார். அதுதான் படத்திற்கு தலைவா என்று பெயர் வைத்திருக்கிறார் என்று வெளியாது.
அதை யாரும் மறுக்கவும் இல்லை ஒத்துக்கொள்ளவும் இல்லை. இப்போது படத்தின் நாயகிகள் அமலாபால், ராகினி நத்வானி, வில்லன் விஜய் யேசுதாஸ் பற்றியும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத செய்திகள் வெளியாகி ரசிகர்களுக்கு தீனி போட்டு வருகிறது.
Post a Comment